சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில், “நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்” என தெரிவித்து உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு தினசரி பல ஆயிரம்பேர் பிழைப்பு தேடி வந்து செல்கின்றனர். அனைவரையும், வரவேற்று வர்களுக்கான தேவையை நிறைவேற்றி வருகிறது மதராச பட்டிணம். அப்பேர்பட்ட சென்னையின் 383வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகஅரசு, சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில்,  பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.  அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.  இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தினத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னைக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.