சென்னை:

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோயம்பேடு கொரோனா வின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக டபுளாகி வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை,  1,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில்உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2வது இடத்தில் திரு.வி.க.நகர் உள்ளது. இங்கு  448 பேருக்கும், ராயபுரத்தில் 422 பேருக்கும், அண்ணாநகரில் 206 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 184 பேரும், தேனாம்பேட்டையில் 316 பேரும், திருவொற்றியூரில் 43 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 205 பேருக்கும், பெருங்குடியில் 22 பேருக்கும், அடையாறில் 107 பேருக்கும், அம்பத்தூரில் 144 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 16 பேருக்கும், மாதவரத்தில் 33 பேருக்கும், சோழிங்கநல்லூ ரில் 15 பேருக்கும், மணலியில் 14 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.