தராபாத்

தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழந்தார்.

நேற்று காலை 11 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா மாவட்டத்தில் உள்ள் துங்கதுர்த்தி சிற்றூரில் ஒரு பயிற்சி விமானம் பறந்து கொண்டிருந்தது.  திடீரென அந்த விமானம் கட்டுப்[பட்டை இழந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கி உள்ளது.  அங்கிருந்த விவசாயிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.   ஆனால் விமானம் விழும்போதே சுக்குநூறாக நொருங்கி உள்ளது.  இது குறித்து காவல்துறை தரப்பில்,

“தெலுங்கானா மாநிலத்தில் நாகார்ஜுன சாகர் அருகே உள்ள தனியார் விமான பயிற்சி மையத்துக்குச் சொந்தமான, 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக விமானம் பயிற்சி மையத்திலிருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டுள்ளது.  இந்த விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   விமானத்தில் பயணம் செய்த சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மகிமா கஜராஜ் என்னும் ௨௯ வயது பெண் பயிற்சி பைலட்  உயிரிழந்துள்ளார்.

மகிமாவுடன் பயணித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் இன்னமும் வரவில்லை.  இதையொட்டி நடத்தப்பட்ட  முதல் கட்ட விசாரணை மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியபடி பயிற்சி விமானம் அங்குள்ள உயர் அழுத்த மின் ஒயரில் (133 கேவி) சிக்கி நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.  மேலும் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.