சென்னை,
பிரபல துணிக்கடையான போத்தீஸ் சென்னை உஸ்மான் ரோடு கிளையில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பிரபலமான துணி நிறுவனம் போத்தீஸ். இதன் கிளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.
நேற்று பாண்டிச்சேரி கிளை நிறுவனத்தில் இருந்து சென்னை கிளைக்கு பேருந்தில் போத்தீஸ் நிறுவன ஊழியர்களால்  எடுத்து வந்த வந்த பணம்  ரூ.1 கோடி போலீசார் சோதனையின்போது சிக்கியது.
இதையடுத்து பாண்டிச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் கிளையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து சென்னை தி நகர் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள போத்தீஸ் துணிக்கடையில்  இன்று காலை ஏழு மணியிலிருந்து வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் தொடர்ந்து  ஈடுப்பட்டு வருங்கின்றனர்.
மேலும் போத்தீஸ் பொட்டிக் மற்றும் போத்தீஸ் நிறுவனர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.