சென்னை: திரையரங்கில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத தாய்-மகள் மீது வழக்கு

Must read

சென்னையில், திரையரங்கில் தேசியகீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத தாய், மகள் இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தற்போது சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக  சென்னை விஜயா ஃபோரம் மால் என்ற ஷாப்பிங் மாலில் உள்ள பாலஸோ திரையரங்கில் நேற்று நண்பகல் 12 மணிக்கு ’க்ளோரி’ என்ற பல்கேரிய நாட்டுத் திரைப்படம் திரையிடப்பட்டது.

படம் துவங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது.  அப்போது படம் பார்க்க வந்த வர்களில் ஒருவரான ஸ்ரீலாவும் அவரது தாயாரும் எழுந்திருக்கவில்லை. மேலும் சிலரும் எழுந்திருக்காமல் அமர்ந்திருந்தனர்.

இதை வேறு சிலர் கண்டித்ததனர். உட்கார்ந்திருந்தவர்களை வெளியேற்றவும்  அவர்கள் முயற்சித்தனர்.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  திரைப்படம் நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஸ்ரீலா அவரது தாயார் மற்றும் ஒருவர் என்று மூவர்,  வட பழனி காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இது குறித்து  பேசிய ஸ்ரீலா, “என்னுடைய தாயார் வயதானவர் என்பதால் அவர் எழுந்து நிற்கவில்லை. எனக்கு எழுந்து நிற்பதில் விருப்பமில்லை

தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற பலரும்கூட, நாங்கள் உட்கார்ந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்கள்தான்  எங்கள் பாஸ்களைப் பறிக்க முயன்றனர்.  அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது.

மேலும், உட்காந்திருப்பது தேசிய கீதத்தை அவமதிப்பதாகாது என்று  சொல்லியும் காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது” என்று தெரிவித்தார்.

More articles

Latest article