சென்னை

சென்னை மின்சார ரயில்களில் எப்போது சீசன் டிக்கட் வழங்கப்படும் என லட்சக்கணக்கான  பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சென்னை நகரில் முக்கியமான போக்குவரத்துகளில் மின்சார ரயில் இன்றியமையாததாகும்.  தினசரி பணிகளுக்குச் செல்வோர் இந்த மின்சார ரயிலை நம்பி வந்தனர்,  இவ்வாறு பயணம் செய்வோரில் சுமார் 40% பேர் சீசண் டிக்கட்டுக்களை பயன்படுத்தி வந்தனர்.  கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு தொடங்கியபோது மின்சார ரயில் சீசன் டிக்கட் வசதியும் நிறுத்தப்பட்டது.

இப்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   மின்சார ரயில்கள் இயக்கம் தொடங்கிய போதிலும் பயணிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார்த் துறைகளில் அத்தியாவசிய பணிக்குச் செல்வோரும் அத்தாட்சி கடிதம் உள்ளோருக்கு மட்டுமே தற்போது சீசன் டிக்கட்டுகள் அளிக்கப்படுகின்றன.

மின்சார ரயிலில் பயணம் செல்வோர் சிலர், “பேருந்துகளை ஒப்பிடும்போது, மின்சார ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால், லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயிலில்  தினசரி பயணிப்போர் பெரும்பாலும் சீசன் டிக்கட்டுகள்எடுத்து விடுவது வழக்கம். இப்போது சீசன் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட் வழங்கப்படுவது இல்லை.

எனவே டிக்கெட் வாங்குவதற்குத் தினமும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சீசன் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட்வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பொதுமக்கள் பயணிப்பதற்கான நேரக் கட்டுபாடுகளையும் நீக்க வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளனர்.