பொங்கல் பண்டிகையை ஒட்டி ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று இரவு முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.

அதேவேளையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேறியதை அடுத்து சென்னை சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் போதிய பேருந்து வசதி இன்றி தவித்து வருவதால் கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகளை இந்த வழித்தடங்களில் இயக்கி வருகின்றனர்.

இதனால் சென்னை மாநகரில் போதிய மாநகர பேருந்து சேவை இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது…