சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

தற்போது சென்னை மாநகரில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. அதே வேளையில் நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகையில் அடர்த்தி அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனால் அரசு பல மேம்பாலங்கள், சாலைகள்,ரயில் சேவைகளை ஏற்படுத்திவருகிறது.  அண்மையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பொதுமக்களின் நல்ல  வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் சேவை பயணத்திற்கு எளிதாகவும், சிரமமின்றி சாலைகள் போன்று இடையூறு இல்லாமல் சீக்கிரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வசதியாக உள்ளது.

மெட்ரோ ரயில் நிலையத்திலும் நிலையத் தூண்களில் பலர் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். மெட்ரோ நிர்வாகம் இதற்காக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலைய தூண்கள், கட்டடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் 6 மாதம் சிறைத்தண்டனை , ரூ 1000 அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயினும் சுவரொட்டிகள் ஒட்டுவது நின்றபாடாக இல்லை.  எனவே இந்த சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.    இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகிகள் தினமும் சுவரொட்டிகள் ஒட்டுவதைப் பற்றி சோதனை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.