தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை  வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Must read

சென்னை: 
மிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மிகப் பலத்த மழை  வாய்ப்பு  உள்ளதாகச்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலே குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்தபட்சமாகத் திருப்பத்தூரில் இயல்பை விட 7%, விருதுநகரில் 1% குறைவு; சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் இயல்பை விட 26% கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்படும் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article