பெங்களூரு: வாழ்க்கை நடத்துவதற்கான உலகின் மலிவான நகரங்களின் வரிசையில், இந்திய நகரங்களான சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்றவை இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; வாழ்க்கை நடத்துவதற்கேற்ற மலிவான மற்றும் செலவினம் மிகுந்த நகரங்களில், முதல் 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் 10 மலிவான நகரங்கள் பட்டியலில், நமது இந்திய நகரங்களான சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகியவற்றுடன், வெனிசுலாவின் காரகாஸ், சிரியாவின் டமாஸ்கஸ், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட், கஜகஸ்தானின் அல்மாட்டி, பாகிஸ்தானின் கராச்சி, நைஜீரியாவின் லாகோஸ் மற்றும் அர்ஜெண்டினாவின் பியூனோஸ் அயர்ஸ் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், உலகின் மிக அதிக செலவுவாய்ந்த நகரங்களில் பாரிஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் முதல் 3 இடங்களுக்குள் வருகின்றன.

இவற்றுடன், சுவிட்சர்லாந்தின் ஜுரிச் மற்றும் ஜெனிவா, ஜப்பானின் ஒசாகா, தென்கொரியாவின் சியோல், டென்மார்க்கின் கோப்பன்ஹேகன், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஜ்ஏஞ்சலிஸ், இஸ்ரேலின் டெல் அவிவ் போன்ற நகரங்களும் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

– மதுரை மாயாண்டி