சென்னை: பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

வாகன இன்சூரன்ஸ் இழப்பீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை  செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆகஸ்டு மாதம் 26ந்தேதி சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இது சர்ச்சையானது. இந்த உத்தரவை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் முறையிட்டன.

இதுதொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் எனும் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை திரும்பப் பெருவதாக அறிவித்துள்ளது. மேலும்,  இந்தத் திட்டத்தை உடனடியாக அமல் படுத்துவதற்கான சூழல் இல்லை என கூறியுள்ளது. அதே சமயம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்காக போக்குவரத்து துறை பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…