சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளை வரை  நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும்  4 வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

மாணவி தற்கொலை காரணமாக,  கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை திறக்கக் கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,  பள்ளியை பல முறை ஆய்வு செய்து அறிக்கை பெற்று வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற பலகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,  டிசம்பர் 5ந்தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரகளைத் தொடர்ந்து, தற்போது, 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்இ,  எல்.கே.ஜி. முதல் 4-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 6 வாரத்துக்கு பின் முடிவு செய்யப்படும் என்று கூறி உள்ளது.

இன்றைய விசாரணையின்போது, பள்ளி நிர்வாகம் தரப்பில்,  மாணவர்களின் அச்சத்தை போக்க 2 மருத்துவர்கள் உளவியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உத்தரவாதம் வழங்கியது.  அதுபோல மாவட்ட ஆட்சியர் தரப்பில்,  பள்ளி பாதுகாப்புக்கு,  ஒரு காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் ஊதிய அடிப்படையில்  நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியதுடன், . 9-ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் தொடங்கிய பின் பள்ளியில் சுமுகமான நிலைமை நிலவுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை ஏற்று மேலும் 4 வகுப்புகளை திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள்