சென்னை

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை சில வாரங்கள் இயக்க அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை  கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில்,

”அரசின் இந்த உத்தரவால் பயணிகள் மட்டுமின்றி, ஆம்னி பஸ் நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்”

என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சில வாரங்களுக்குச் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.