சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது/
இன்று சென்னை உயர்நீதிமன்றம்,
”கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும்
என்று விதிமுறைகள் விதித்துள்ளது..
சென்னை உயர்நீதிமன்றம் கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கூடிய வழக்கில், இந்த விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.