சென்னை

ல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.  அவருக்குப் புதுவை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது.  மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மாணவரை சேர்க்க நிறுவனம் மறுப்பு தெரிவித்தது மிகவும் அதிர்ச்சியை அளித்தது.

மாணவர் சித்தார்த்தன் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தவில்லை என் நிறுவனம் தரப்பில் காரணம் கூறப்பட்டது.  பிறகு அவர் கட்டாயப் பணிக்கான உத்தரவாதம் அளிக்கவில்லை என மற்றொரு காரணம் கூறப்பட்டது.  இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்தார்த்தம் வழக்கு தொட்ர்ந்தார்.

இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்ரமணியன் மற்றும் ஆர் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.  அமர்வு தனது தீர்ப்பில் மாணவர் சித்தார்த்தனுக்கு நிறுவனம் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தது.

மேலும்  சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பில் மனசாட்சி அற்ற சில தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வியை வணிக மயமாக்கி உள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.