சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.  இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது.  கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் இதுவரை தங்கள் நிலை குறித்து ஏதும் கருத்து கூறாமல் உள்ளன.

இந்நிலையில் இன்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுநர் ஆர் என் ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசி உள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த்,

“தமிழக விவசாயிகளுக்குக் காவிரி விவகாரத்தில் கிடைக்க வேண்டிய உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.  இந்த பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்வதால் இதற்கு நதி நீர் இணைப்பு மட்டுமே ஒரே தீர்வு எனத் தெரிவித்து இணைப்புக்கு ஆளுநர் மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளேன்”

எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

TN Governor, Premalatha Vijayakanth, meet,