சென்னை

ன்று  சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்,

”சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை (ஜூன் 28) இரவு 11.15 மணிக்குப் புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண் 06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.

மறுமார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண் 06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.”

எனஅறிவிக்கப்பட்டுள்ளது.