சென்னை: சென்னையில்  உள்ள பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்-ல் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானா மாநிலத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்யதாக கூறப்படுகிறது.

சென்னையில் பல பகுதிகளில் செயல்பட்டு வந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  198 முறை ஸ்வைப் செய்து, சுமார் 48  லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நூதன கொலையானது  வேலூரிலும் நடைபெற்றது தெரிய வந்தது.  இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்தது, கேஷ் டெபாசிட் இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்தி அரங்கேற்றப்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் அறிவித்ததுடன், கேஷ் டெபாசிட் இயந்திரம் உபயோகப்படுத்தவும் தடை விதித்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கொள்ளையர்கள் சென்னையை விட்டு தப்பியிருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்கள் வட மாநிலத்தவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு தனிப்படை அமைத்து  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபோன்ற கொள்ளை சம்பவம் ஏற்கனவே டெல்லியில் நடைபெற்றுள்ளதும், அந்த கொள்ளையர்கள் அரியான மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் அரியானா விரைந்தனர், அங்கு ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் மூவரை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.