சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2ஆக பிரிப்பு! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்…

Must read

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்ப தற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதிநாளான இன்று தமிழக அரசின் சார்பில் துணை பட்ஜெட் உள்பட ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி,  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறு வனம் என்ற பெயரில் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் என்றும்,  அண்ணா தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article