சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியைத் தொடங்கினர்.

அண்மையில் முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழகமானது 2 ஆக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவு, அண்ணா தொழில்நுட்பம், மற்றொரு பிரிவு அண்ணா பல்கலைக்கழகம் என்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவால் அண்ணா பல்கலைக்கழகத்தின் 41 ஆண்டுகால புகழ் மறைக்கப்படும் என்று பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இந் நிலையில், பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியைத் தொடங்கினர்.

பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். பெயர் மாற்றம் மாணவர்களின் சான்றிதழ்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.