சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 150 இளம் பல்கலைக்கழக பட்டியலில் இடம் பெற்றுள்ள்து.

கியூ எஸ் தரவரிசை என அழைக்கப்படும் குவக்குரேலி சிமான்ட்ஸ் தர வரிசி நிறுவனம் உலகில் உள்ள பல்கலைக் கழகங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கல்வி நற்பெயர் (40% மதிப்பெண்கள்), ஆசிரியர் – மாணவர் விகிதம் (20%), ஆசிரியர் வேலைப்பளு (20%) சர்வதேச வசதி (5%) மற்றும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை (5%) என மதிப்பிடப்பட்டது. அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் உள்ள 150 இளைய பல்கலைக்கழகங்களில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. இதைத் தவிர கௌகாத்தி ஐஐடி, அரியானாவின் ஜிண்டால் சர்வ்தேச பல்கலைக்கழகம் ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன இதில் கௌகாத்தி ஐஐடி 71-80 ஆம் இடத்தில் உள்ளது. ஜிண்டால் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் 101 – 150 ஆம் இடங்களுக்குள் உள்ளன.

இந்த ஆய்வில்  சிறந்த 1000 பல்கலைக்கழகங்களின் பட்டியலும் வெளியிடபட்டுள்ளது.   இந்தியாவின் 23 பல்கலைக்கழகங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் அன்னா பல்கலைக்கழகம் 12 ஆம் இடத்தில் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர் வேலைப்பளுவில் நல மதிபெண்கள் பெற்றுள்ளது. ஆயினும் மொத்தத்தில் ஒன்பதாம் இடத்தில் வந்துள்ளதால் உடனடியாக காலி இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.