சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.
a
சமீபகாலமாக சென்னை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆணையர் டி.கே.ராஜேந்திரன், “கடந்த 2 நாட்களில் மாநகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 161 ரவுடிகளை கைது செய்தன். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். .
இரவு நேர ரோந்து பணியை நானே நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன். . நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரயில்வே போலீசாருக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்று ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.