சென்னை:
தேமுதிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கேப்டன் டிவியின் பங்குதாரரான சங்கர் தலைமையில் 50 தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததார்கள்.   இதனால் கேப்டன் டிவி ஒளிபரப்பு தொடருமா என்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது.
தே.மு.தி.க.வின் அதிகாரபூர்வ சேனல்களாக,  கேப்டன் டிவி, கேப்டன் நியூஸ் ஆகிய சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.  இந்த டி.வி.க்களின் பங்குதாரராக இருப்பவர் தேமுதிக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ். சங்கர்.
இன்று சங்கர், தேமுதிகவில் இருந்து விலகினார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். அவருடன் குன்றத்தூர் ஒன்றிய கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேஷ் கோபு, குன்றத்தூர் பேரூர் முன்னாள் செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி சூரியமூர்த்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
images
கேப்படன் டிவி பங்குதாரராக இருக்கும் சங்கர் தற்போது திமுகவில் இணைந்துள்ளதால்,  நிலையில் கேப்டன் டிவி, கேப்டன் நியூஸ் சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியடைந்ததால் தேமுதிகவின் சின்னமான முரசு பறிபோனது. தற்போது அதிகாரபூர்வ டிவிக்கள் செயல்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சங்கர் விலகல் குறித்து தே.மு.தி.க.வினர், “கேப்டன் மிகவும் நம்பியவர்களி்ல் ஒருவர் சங்கர். நேற்றுகூட கேப்டனிடன் பேசினார். கேப்டன் டிவி எதிர்காலம் குறித்தும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தும் பேசினார். இந்த நிலையில் இன்று திடீரென அவர் தி.முக.வில் சேர்ந்துள்ளதை அறிந்த கேப்டம் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டார்” என்றனர்.
மொத்தத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு இது சோதனை காலம்தான்.