சென்னை:
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை உள்ளது. இதில், 24மணிநேரம் பேருந்துகள் உள்பட வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். இந்த நிலையில், அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில், இன்று காலை பணி நிமித்தமாக வெறு இடங்களுக்கு செல்லும் வகையில், ஏராளமானோர் நகரப்பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது, திடீரென திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள்மீது பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் , லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் கூச்சல் போட்டனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.