கோயம்பேடு : ரசாயனத்தில் பழுக்க வைத்த 15 டன் வாழைத்தார்கள் அழிப்பு

Must read

சென்னை

கோயம்பேடு பழ அங்காடியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 15 டன் வாழைத்தார்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளன.

 

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குச் சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் கார்பைட் கல்லில் பழுக்க வைக்கப்பட வாழைத்தார்கள் விற்க்கப்படுவதாக் தொடர்ந்து புகார்கள் வந்தன.   இன்று அதிகாலை 4 மணிக்குச் சென்னை உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிகள் சுந்தரமூர்த்தி மற்றும் சதீஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அங்காடிக்குச் சென்று சோதனை நடத்தினார்கள்.

சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த இந்த சோதனையில் கார்பைட் கல் மற்றும் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பறிமுதல் செய்த குழுவினர் அங்காடிக்கும் பின்புறம் உள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று அழித்தனர். வேறு பழங்கள் இவ்வாறு பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடந்து வருகிறது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர்,

“பழங்களை கார்பைடு கல் மற்றும் ரசாயனம் தெளித்து செயற்கை முறையில்  பழுக்கவைத்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படிப் பழுக்கவைக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் உடல் பாதிப்பு, வயிற்றுப் போக்கு, அஜீரண கோளாறுகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் தாக்கவும் வாய்ப்புள்ளது.  கார்பைடு கல்லில் பழங்களைப் பழுக்கவைக்கும் செயலில் வியாபாரிகள் ஈடுபடக்கூடாது.  இவ்வாறு செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்யமுடியாத நிலைமை ஏற்படும்.”

என எச்சரித்துள்ளனர்.

More articles

Latest article