சேலம்:
சேலம், சின்னக்கடை வீதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், சின்னக்கடை வீதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், உரிமம் இல்லாமல் ரசாயனம் தெளித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ அனுப்பினர்.