சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும்.

கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கியிருந்தார்கள். அதற்கு அவர்கள் அனைவருமே இது போலியானது என மறுப்பு தெரிவித்திருந்தார்கள். அந்த வரிசையில் இப்போது சார்லியும் இணைகிறார்.

“இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்ற பதிவு சார்லியின் பெயரில் ட்விட்டர் கணக்கில் வெளியாகியிருந்தது.

தற்போது இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார் சார்லி.

என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி இன்று (ஜூன் 11) போலி ட்விட்டர் கணக்கு (https://twitter.com/ActorCharle) துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என சார்லி தெரிவித்துள்ளார்.