கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும் கூட தொற்று பாதிப்பினாலோ தொற்று தாக்கிவிட்டு சென்ற பிறகும் வேறு தாக்கங்களாலோ பாதிக்கப்படுபவர்கள் மரணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான பாலசரவணனின் தந்தை திடீரென உயிரிழந்திருப்பது, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால சரவணனின், தந்தை எஸ்.ஏ.ரங்கநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் பாலசரவணன் அண்மையில் தான் தமது சகோதரியின் கணவர், 32 வயதிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும் கொரோனாவை அலட்சியமாக கருத வேண்டாம் என்றும் தமது சமூக வலைதளத்தின் தெரிவித்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியிருந்தார்.