ரேபரேலி:
ராபர்ட் வதேரா லண்டனில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக  புதிய  குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மத்திய அரசின் சதி முயற்சிகளில்  இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலி சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்ததாவது:
“ காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான சதிச்செயல்தான், வதேரா மீதான பொய்யான குற்றச்சாட்டு.
ஒவ்வொரு நாளும் பாஜகவினர் புதிய, புதிய தவறான – பொய்யான  குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். குற்றச்சாட்டு எதுவும் இருந்தால், பாரபட்சமற்ற விசாரணை நடத்தட்டும். அப்போதுதான் உண்மை வெளியாகும்” என்றார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

முன்னதாக, சஞ்சய் பண்டாரி என்ற ஆயுத வியாபாரி மூலமாக லண்டனில்  ராபர்ட் வதேரா  ரூ.19 கோடி மதிப்புள்ள பங்களாவை 2009-ம் ஆண்டு வாங்கியதாகவும், பின்னர் 2010ம் ஆண்டு கூடுதல் விலைக்கு விற்றதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பிரியங்கா - வதேரா
பிரியங்கா – வதேரா

ஆனால், ராபர்ட் வதேரா தரப்பில் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் மறுக்கப்பட்டது. சஞ்செய் பண்டாரியுடனும் ராபர்ட் வதேராவுக்கு எந்த வணிக தொடர்பும் இல்லை எனவும் அவரது நிறுவனம் விளக்கம் அளித்தது
இதற்கிடையே, “சஞ்சய் பண்டாரி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரும் தெலுங்கு தேச பிரமுகருமான கஜபதி ராஜூவை  நான்கு முறை சந்தித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதிலிருந்து வதேரா மீதான பொய்க் குற்றச்சாட்டு மத்திய பா.ஜ.க. அரசின் என்பது உறுதியாகிறது” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.