இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் சபாக்.

இப்படம் முழுக்க முழுக்க ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

இப்படம் ரிலீசாகும் முன் JNU மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த திபிகா படுகோனுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என சமூக ஊடக போராளிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இந்த திரைப்படத்தில் இந்து சமூகத்தின் பெயர் வில்லனாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி தங்கள் போராட்டத்தை முன்வைத்தனர் .

இது ஒரு புறம் இருக்க ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் அபர்னா பட் சபாக் தனக்கு கிரெடிட் தரவில்லை என்று குறிப்பிட்டு படத்திற்கு தடை கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் . பின் மனுதாரரின் பெயரை திரைப்படத் தயாரிப்பாளர் அங்கீகரிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியதால் சேர்க்கப்பட்டது

இத்தனை தடங்கலுக்கு பின் வெளியான படம் தற்போது நன்கு ஓடி வந்த நிலையில் இப்போதும் வசூல் பின்னடைவை சந்தித்து வருகிறது.

வெள்ளி – ரூ 4.77 கோடி
சனி – ரூ 6.90 கோடி
ஞாயிறு – ரூ 7.35 கோடி
திங்கள் – ரூ 2.35 கோடி
செவ்வாய் – ரூ 2.55 கோடி
புதன் – ரூ2.61 கோடி
வியாழன் – ரூ 1.81 கோடி
மொத்தம் – ரூ 28.83 கோடி