ஜூலை 21 அல்லது 22ந்தேதி மீண்டும் ஏவப்படுகிறது சந்திராயன்2 விண்கலம்! இஸ்ரோ

Must read

ஸ்ரீஹரிகோட்டா:

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன்-2  விண்கலம் விண்ணுக்கு ஏவுவதை நிறுத்திய இஸ்ரோ, மீண்டும் வரும் 21  அல்லது 22ந்தேதிகளில் விண்ணுக்கு ஏவ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயாரித்து வந்தது. அதைக்கொண்டு,  நிலவின் தென் துருவ பகுதியை உலகில் முதன் முறையாக,  ஆய்வு செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.

அதன்படி, சந்திராயன் 2 விண்கலம், ஏற்கனவே அறிவித்தப்படி கடந்த 15ந்தேதி அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்த தயாராகி, கவுன்டவுன் நடைபெற்று வந்த நிலவில், விண்கலத்தில் உள்ள சிறிய கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விண்ணுக்கு ஏவுவதை இஸ்ரோ தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரோ, ராக்கெட்டை ஏவும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், விரைவில், வேறு ஒரு தேதி  அறிவிக்கப்படும் என்றும் கூறியது.

இந்த நிலையில், வரும் 21, 22ந்தேதிகளில் சந்திராயன்-2 விண்கலத்தை மீண்டும் விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

வரும் 21ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் அல்லது 22ந்தேதியான திங்கட்கிழமை அதிகாலை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது.

More articles

Latest article