தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெலவெலத்து போய்  நிற்கின்கின்றன.

காரணம்?

அந்த மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

ஆந்திராவை பிரித்து  தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய போராட்டம் –வேள்விக்கு நிகரானது என்பதில் சந்தேகம் இல்லை.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின் அந்த மாநிலத்தையே தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்- சந்திரசேகர் ராவ்.

 

இரண்டாம் முறையாக 3 மாதங்களுக்கு முன்பு முதல்வரான பின்னர் ‘ஹிட்லர்’ பாணி அரசியலை பின் பற்ற ஆரம்பித்து விட்டார் என்று சொன்னால் தப்பில்லை.

ஒரே ஒரு அமைச்சரை  மட்டும் துணைக்கு சேர்த்துக்கொண்டு இரண்டரை மாதங்கள் ’கேபினெட்’ இல்லாமல்  காலம் தள்ளியபோதே அவரது சர்வாதிகாரம் வெளிப்பட்டது.

ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக கண்டித்த பின்பே –சில நாட்களுக்கு முன்னர் சில மந்திரிகளை வேண்டா வெறுப்பாக நியமித்தார்.

மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்பது அவரது –பாலிசி.

அதன் ஒரு பகுதியாக -சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ்.கட்சி – மாநிலத்தில் எஞ்சி இருக்கும் அத்தனை கட்சிகளையும் தின்று ஏப்பம் விட ஆரம்பித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கு  நடந்த சட்டசபை  தேர்தலில் 19 இடங்களில் காங்கிரஸ் வென்றது.. அவர்களில்  9 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு ‘வாங்கி’ விட்டார் –ராவ்.

இப்போது அடுத்த ஆட்டம் ஆரம்பம்.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒன்றை கூட்டணி கட்சியான மஜ்லிஸ் கட்சிக்கு கொடுத்து விட்டு மிச்சமுள்ள 16 இடங்களிலும் டி.ஆர்.எஸ்.கட்சியே போட்டியிடுகிறது.

‘’அத்தனை இடங்களையும் அள்ள வேண்டும்’’ என்பது ராவின் ‘டார்கெட்’.

வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்  ஏதும் இன்றி காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள்  களத்தில் நிற்கின்றன .

‘தேர்தலை புறக்கணிக்கிறோம்’ என்று சொல்லி போட்டியில் இருந்து முழுதாய் ஒதுங்கி கொண்டது –தெலுங்கு தேசம்.1982 ல் தொடங்கப்பட்ட அந்த கட்சி தேர்தலை புறக்கணிப்பது இதுவே முதல் முறை.

‘’தெலுங்கானா எங்க ஏரியா.. வேறு எந்த கட்சியும் இங்கே வரக்கூடாது’’என்பதே சந்திரசேகர் ராவ் சொல்ல வரும்செய்தி.

–பாப்பாங்குளம் பாரதி