புதுடெல்லி: மத்தியில் பாரதீய ஜனதா அல்லாத அரசை ‍அமைப்பது தொடர்பாக, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன், இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்தினார்.

டெல்லி சென்றடைந்த அவர், ராகுல் காந்தி, சரத்பவார், லோக்தந்ரிக் ஜனதாதள் தலைவர் சரத் யாதவ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இதன்பிறகு, உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ புறப்பட்டு சென்ற அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரையும் சந்தித்தார்.

அவர்கள் இருவரும் இதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து வெளிப்படையான கருத்து எதையும் தெரிவிக்காமல் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்தித்தார்.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, ஒரு அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.