சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,  கைது செய்யப்பட்டதை, ஆடி அமைச்சர் ரோஜா கொண்டாடிய நிலையில், அமைச்சர் ரோஜா ஆபாசப பட நடிகை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ள  தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி, தேவைப்பட்டால் அமைச்சர் ரோஜாவின் ஆபாச பட ஒரிஜினலையும் வெளியிடுவோம் என எச்சரித்துள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை மாநில சிஐடி போலீஸார்  செப்டம்பர் 9ந்தேதி ஜாமினில் வெளிவர முடியாத சட்டங்களின்கீழ்  அதிகாலையில் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரைமறுநாள் விஜயவாடா லஞ்சஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதில் சந்திரபாபுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜமகேந்திர வரம் மத்திய சிறையில் சந்திரபாபு அடைக்கப்பட்டார். அவருக்கு 7691 எனும் கைதி எண் வழங்கப்பட்டது. அவருக்கு வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகள், நாளிதழ்கள் வழங்கப்படுகிறது. ஏசி அறை, டி.வி. உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு  வருகிறது. கடந்த ஒரு மாதமாக அவர் சிறையில் வாடி வருகிறார்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை  எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது கைது காரணமாக, தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 10 பேர் மாரடைப்பு மற்றும் தற்கொலை காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், சந்திரபாபு நாயுடு கைதுவை ஜெகன்மோகன் ரெட்டி கட்சியான ஒய்எஸ்ஆர் கட்டி கொண்டாடி வருகிறது. ஜெகன் அரசின் அமைச்சாக உள்ள ரோஜா, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை ஆடி பாடி சந்தோஷமாக கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அமைச்சர் ரோஜாமீது, தெலுங்குதேசம் மகளிர் அணியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சி ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்திலும் எதிரொலித்தது,  ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் கடுமையாக ரோஜாவை விமர்சனம் செய்தார்.

இதற்கு, செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீருடன்  பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர்அணி தலைவி வாங்கலபுடி அனிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? என காட்டமாக கேள்வி எழுப்பிய அனிதா, கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசுகிறார் என்றவர்,  ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை. ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார். ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள் என்று கூறினார்.

மேலும், தற்போது அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.