சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இன்று மதியம் சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

25-01-2022:  தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்; ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

26-01-2022: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

27-01-2022: தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுகதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

28-01-2022: தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மீனம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திரூர், காஞ்சிபுரம் மாவட்டம் கட்டப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம், மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.