சென்னை: 
6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை தொடரும் எனச் சென்னை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.