டில்லி

மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயின் அடிப்படையில் மே மாத நிதி பகிர்வு தொகையாகத் தமிழகத்துக்கு இன்று ரூ.1928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கொரோனா தடுப்புக்காக இந்தியா முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.   பல தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அர்சு அலுவலகங்கள் உள்ளிட்ட பலவும் இயங்காததால் அனைத்து மாநில  அரசுகளுக்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதனால் மாநில அரசுகள் மத்திய அரசு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கக் கோரிக்கை விடுத்தன.

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.  அப்போது மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் பெரும்பாலான தொகையை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.  அவ்வகையில் மாநிலங்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய நிதிப்பகிர்வை மத்திய அரசு விடுத்தித்துளது.  ,மொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ.46,038.70 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

இதில் அதிகத் தொகையாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.8255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளது.  தமிழகத்துக்கு ரு.1928 கோடி ஒதுக்கீடு செய்யபபட்டுள்ளது.  பீகார் மாநிலத்துக்கு 4631 கோடியும் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.3630 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதைத்தவிர 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கிட்டாக 28 மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.5005.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்துக்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.