புதுடெல்லி: ரஃபேல் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளது மத்திய அரசு.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும், ஈட்டுதல் பிரிவுக்கான மேலாளராகவும் இருக்கும் ஒரு உயரதிகாரியால், மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டுமென கூறுவோர், தவறான அபிப்ராயத்தின் பேரில் அதை செய்வதாகவும், அவர்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பிறரால், ரஃபேல் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பராமரிக்கத் தகுந்தவையல்ல என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களின் மனு, எந்த வகையிலும் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், தள்ளுபடி செய்ய மட்டுமே தகுதியானது என்றும் அந்த எதிர்ப்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.