டில்லி,

த்திய அரசு எங்களை மதிக்கவில்லை. எங்களை கலந்தாலோசிக்காமல் செயல்படுகிறது என மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி குற்றம் சாட்டினார்.

நடைபெற இருக்கும் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா  5 மாநில இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் கமிஷன் உத்தரவுகளை மதிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும்,

இதன் காரணமாக மாநிலங்களில் குழப்பமான நிலை உள்ளதாகவும் தேர்தல் பார்வையாளர்கள்  தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தேலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறியிருப்பதாவது,

சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களிலும், எந்தவிதமான அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் சில துறைகள் இதுகுறித்து கண்டுக்காமல் அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பது குறித்து தேர்தல் ஆணையம் கவலைகொண்டுள்ளது என்று கூறினார்.

மேலும்,  மத்திய அமைச்சகங்களின் இதுபோன்ற செயலால் மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,

இதுகுறித்து ஜனவரி 27ந்தேதி நிதிஆயோக்-கிற்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியதாகவும், அதில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சங்களில் எந்தவிதமான அறிவிப்புகளும் வெளியிடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்து.

ஆனால், ஜனவரி 4ந்தேதி தேர்தல் குறித்த அறிவிப்பு அமலுக்கு வந்தபிறகு, பாதுகாப்பு அமைச்சகம் பிரதமர் தலைமையில் உத்தரகாண்டில் ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டை நடத்தி இருக்கிறார்.

மேலும், மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

வரும் பிப்ரவரி 1ந்தேதி, மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் குறித்து  தேர்தல் கமிஷனை கலந்துஆலோசிக்கவில்லை என்றும் நஜிம் ஜைதி குற்றம்சாட்டினார் கூறினார்.

தேர்தல் கமிஷனரின் இந்த அதிரடி பேட்டி மத்திய அரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில், சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எந்தவித திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.