டில்லி

தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பரோடா வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளான தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை  பரோடா வ்ங்கியுடன் இணைய உள்ளதாக கட்ந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசா அறிவிக்கப்பட்டது. இதனால் பணி இழப்பு ஏற்படும் என வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வங்கி நிர்வாகம் அவ்வாறு பணி இழப்பு ஏற்படாது என வாய்மொழியாக தெரிவித்தது. மேலும் இந்த இணைப்புக்குப் பின் இந்த வங்கிநட்டின் இரண்டாவது பெரிய வங்கியாகும் எனவும் தெரிவித்தது.

இந்த வ்ங்கி இணைப்பு குறித்து நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் முடிவில் வங்கிகள் இணைப்புக்கு அமைச்சரவி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அறிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தற்போது பணியில் உள்ளவர்கள் யாரும் பணி இழக்க மாடார்கள் எனவும் அவர்களுடைய பணியில் மாருதல் ஏதும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி பங்குதாரர்களுக்கு இனி பரோடா வங்கியின் பங்குகள் வழங்கப்பட உள்ளன. இந்த இரு வங்கிகளின் பங்கை விட பரோடா வங்கியின் பங்குகள் அதிக மதிப்பு கொண்டவைகள் ஆகும். அதனால் விஜயா வங்கியின் ஆயிரம் பங்குகளுக்கு பரோடா வங்கியின் 400 பங்குகள் அளிக்கப்பட உள்ளன அத்துடன் தேனா வங்கியின் 1000 பங்குகளுக்கு பரோடா வங்கியின் 110 பங்குகள் வழங்கப்பட உள்ளன.