புதுடெல்லி: ஐடி மற்றும் பிபிஓ துறைகளை ஊக்குவிக்கும் வகையில், பல சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நடைமுறையை ஊக்குவிக்கவும், ஐடி மற்றும் ஐடி தொழில்நுட்பம் மூலமாக நடைபெறும் சேவைகள் மற்றும் பிபிஓ ஆகியவற்றை வலுவாக்கும் வகையில் முக்கிய சீர்திருத்தங்களை மோடி அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய திருத்தங்களின்படி, பிற சேவை வழங்குநர்கள் என்ற வகைப்பட்ட தொழிலுக்கு பதிவுசெய்ய வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியால் வழங்கப்படும் உத்தரவாதம் மற்றும் ஸ்டேடிக் ஐபிக்கள் ஆகியவற்றிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடிக்கடி ரிப்போர்ட்டிங் செய்தல், டயகிராம்களை வெளியிடுதல் மற்றும் தண்டனை விதிகள் ஆகியவையும் விலக்கப்பட்டுள்ளன. இந்தியாவை ஒரு தொழில்நுட்ப கேந்திர மையமாக மாற்றவும், இந்நாட்டில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கும் ஏற்றவகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.