டில்லி

த்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களும் அடங்கும்.    இந்த இரு மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 15% விளைகிறது.   தற்போது இந்த இரு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது..  இதனால் நெல் உள்ளிட்ட தானியங்கள் ஈரப்பதம் அதிகமாகி எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது

ஆகவே மத்திய அரசு திடீரென நெல் மற்றும் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யும் தேதியை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.  ஏற்கனவே அறுவடை முடிந்த நிலையில் இந்த ஒத்திவைப்பினால் நெல் உள்ளிட்ட தானியங்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டது.  எனவே மத்திய அரசின் முடிவை எதிர்த்து இந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது.  மத்திய அரசு இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்கள் கொள்முதலைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பின்படி குறைந்த பட ஆதரவு விலை அடிப்படையில் கொள்முதல் நடைபெற உள்ளது.  இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கை விட்டுள்ளனர்.