காஞ்சிபுரம் : காஞ்சியில் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் மேலும் 150 இடங்கள் தமிழ்நாடுக்கு கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 37 உள்ளன. மேலும் பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில், 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் வசதியாக புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி கோரப்பட்டிருந்தது. இதை ஆய்வு செய்த தேசிய மருத்துவ ஆணையம்  தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு மேலும் 150 இடங்கள் கிடைத்துள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் 2023-2024ம் ஆண்டு மருத்துவ சேர்க்கையில் மேலும் 150 இடங்கள் கிடைத்துள்ளன.