மத்திய அமைச்சகம் ஆவடி தொழிற்சாலையில் இருண்டு ரூ.7523 கோடிக்கு பீரங்கி கொள்முதல்

Must read

சென்னை

சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் இருந்து மத்திய அமைச்சகம் 7,523 கோடி ரூபாயில் 118 பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது.

சென்னை ஆவடியில் மத்திய அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன.  இங்குப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.   இங்கு ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.

தற்போது ஆவடியில் இயங்கி வரும் பீரங்கி தயாரிப்பு ஆலையில் இருந்து அர்ஜுன் எம் கே 1ஏ ரக பீரங்கிகளை வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் இட்டுள்ளது.  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் 118 பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7,523 கோடி ரூபாய் ஆகும்.

More articles

Latest article