பள்ளிகள் திறந்து 3 வாரமாகியும் புத்தகங்கள் வழங்கவில்லை : புதுச்சேரி பாஜக ஆட்சியில் அவலம்

Must read

புதுச்சேரி

பாஜக ஆளும் புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆகியும் பாடப் புத்தகங்கள் வழங்காத நிலை உள்ளது.,

கொரோனா தொற்று காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடந்து வந்தன.   இந்நிலையில் சென்ற ஜூலை 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ராமசாமி அறிவித்தார்.  ஆனால் கொரோனா  பரவல் குறையாததால் அது தள்ளிப் போனது.  அதே வேளையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இதையொட்டி புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படன.  அங்கு காலி 9 மணி முதல் பகல் 1 மணிவரை அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படுகின்றன.  தவிர தி|ங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளும் நடக்கின்றன.

தமிழகத்தில் முழு நேர பள்ளி, மதிய உணவு மற்றும் பாட நூல் வழங்கல் ஆகியவை வழக்கம் போல் நடைபெறுகின்றன. பாஜக ஆளும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படாத அவல நிலை உள்ளது.  மாணவர்கள் பழைய புத்தகங்கள் மற்றும் ஜெராக்ஸ் பிரதிகளை வைத்து கல்வி கற்கின்றனர்.

தவிர மாணவர் சிறப்பு  பேருந்து இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு வர கடும் சிரமம் அடைகின்றனர்.  மதிய உணவு வழங்கலும் இன்னும் தொடங்கப்படவில்லை.    புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், “புதுச்சேரிக்குப் பாடநூல் தமிழகத்தில் இருந்து தான் வர வேண்டும். இதுவரை 50 சதவீதம் பாடநூல்தான் வந்துள்ளது. நாளை முதல் அவற்றஒ வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் மீதியுள்ள 50 சதவீத நூல்கள் விரைவில் வரவுள்ளது.

பள்ளி மாணவர் சிறப்புப் பேருந்துக்காக 5 ஆண்டுகள் போடப்பட்ட டென்டர் முடிந்துவிட்டதால் புதிதாக டென்டர் போட அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பேருந்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் இருக்கிற பேருந்துகள் போதாது.   ஆகவே  சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்குக் குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும்.

கொரோனா தொற்று காரணமாக மதிய உணவு வழங்குவதில் சிரமம் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை உயர்ந்து, தொற்று பாதிப்பு குறைந்த பிறகு மதிய உணவு வழங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article