பெங்களூரு,

ர்நாடகாவில் பாரதியஜனதா ஆட்சியின் போது நடைபெற்ற சுரங்க ஊழல் தொடர்பான அனைத்து வழக்குகளை யும் மத்திய புலனாய்வு ஆணையம் மூடி வருவதாக தககவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில்  எயூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் போது நடைபெற்ற சுரங்க ஊழல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெல்லாரி ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தனரெட்டி, கருணாகர ரெட்டி, சோமசேகரரெட்டி ஆகியோர் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார்.

பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி எடியூரப்பா மந்திரி சபையில் மந்திரியாக இருந்தார். சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதால் ஜனார்த்தன ரெட்டி பதவி விலகினார். இதற்கிடையே இந்த சுரங்க மோசடியில் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டு இருப்பது பற்றி சிபிஐ விசாரணை நடத்தியது.

சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்பு தாது கனிமங்களை சட்டவிரோதமாக துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த முறைகேட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமாக 17,086 டன் இரும்பு தாது ஏற்றுமதி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பலாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட 25,000 கோடி ரூபாய்க்கு குற்றஞ்சாட்டப்பட்ட ஊழல் மதிக்கப்படுவதாக 2012 ம் ஆண்டு அமைச்ச்ர கூறியிருந்தார்.

கர்நாடகாவில் இருந்து 12.57 கோடி மெட்ரிக் டன் இரும்பு தாது உற்பத்தி செய்யப்பட்டு, 2006 முதல் 2010 வரை, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என்று லோக்ஆயுக்தாவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது

கோவாவை தவிர மொத்தம் 12.57 கோடி டன் இரும்பு தாது ஏற்றுமதி செய்யப்பட்டது. 2.98 கோடி டன் மெட்டல் சட்டவிரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓபுலாபுரம் சுரங்கக் கம்பெனி மூலம் ஜனார்த்தன் ரெட்டி, ஜி.கருணாகர் ரெட்டி ஆகிய சகோதரர்கள் கடந்த பாரதியஜனதா ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்தவர்கள்.  இவர்கள்  இரும்புக் கனிம வளங்களைச் சுரண்டிய விதம், பக்கம் பக்கமாக இதில் வெளிவந்திருக்கிறது.  இவர்கள் இருவரும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

கர்நாடகாவின் பெலகேரி துறைமுகம் வழியாக அனுப்பி வைக்கப்படும் இந்த இரும்புத் தாது, சீனாவிற்கும், சிங்கப்பூருக்கும் சென்றிருக்கிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா கடந்த ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது கர்நாடக பாஜகவினர் மீதான கனிம ஏற்றுமதி ஊழல் வழக்குகளை சிபிஐ மூடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவா, மங்களூரு மற்றும் கிருஷ்ணபத்னம் ஆகிய துறைமுகங்களில் இருந்து வரும் சட்டவிரோத தாதுப் பொருட்களின் ஏற்றுமதி குறித்த விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இந்த தகவலை வெளியிட்டது.