டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவரும், 10 மற்றும் 12ம் வகுப்புகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவா்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை 33 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாலரை லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களை இழந்து அனாதையாகி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவியை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. அதேபோல் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் உதவுகின்றன.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்த என  சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

முதல் கட்டமாக,  சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவா்கள் கொரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்தவா்களாக இருந்தால் அவா்கள் பதிவு கட்டணமோ, தோவு கட்டணமோ செலுத்த வேண்டாம் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  பொதுத் தோவுகளை எழுதும் மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்கும் போது கொரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்த மாணவா்களின் தகவல்களையும் பள்ளிகள் ஆராய்ந்து வழங்கும் என்று தெரிவித்துள்ளாா்.