டெல்லி :

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கல்விநிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது சிபிஎஸ்இ கல்வி வாரியம்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, போன்ற பெருநகரங்களில் மட்டுமே பெருமளவில் இந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன, ஆனால் ஹிந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அரசு பள்ளிகளை போல் மூலைமுடுக்குகளில் எல்லாம் செயல்படுகிறது.

இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும், சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் இந்த அறிவிப்பால் செய்வதறியாது திகைத்துபோயுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது, வேலைநிமித்தமாக பெருநகரங்களில் குடியிருந்தவர்கள் நீண்ட நாட்கள் வேலையில்லாமல் இருப்பதால் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தவர்கள் பலர் மொபைல் நெட்ஒர்கே கிடைக்காமல் அவதியுறும் போது மொபைல் இன்டர்நெட் இணைப்பை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மொபைல் மூலம் தனது பிள்ளைகளுக்கு பாடம் படிக்க உதவும் பெற்றோர்களும் அவர்களின் மொபைலுக்கு ஏதாவது முக்கிய அழைப்பு வந்தால் அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்ற சந்தேகத்தில் குழம்பிபோயுள்ளனர்.

மேலும், அவர்கள் வழங்கும் பாட சம்பந்தமான பதிவுகள் அனைத்து மொபைலிலும் பதிவிறக்கம் செய்யமுடியுமா என்பதும் கேள்விக் குறியாகவுள்ளது .

லேப்டாப் போன்ற இதர சாதனங்கள் பயன்படுத்துவோரும் ஒரு சிலர் தங்கள் வேலை நிமித்தமாக வீட்டில் இருந்து வேலை செய்வதால் இதையும் முழுமையாக செயல் படுத்தமுடியவில்லை.

எனினும், இந்த இனைய வழி கல்விக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், அவர்களின் வருகை பதிவு என்ன, பல்வேறு காரணங்களால் இனைய முடியாதவர்களுக்கு என்ன வழி என்பது குறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கையும் விளக்கமும் அளிக்குமா சிபிஎஸ்இ கல்வி வாரியம் அல்லது சிபிஎஸ்இ கல்வி என்பது சாமானியனுக்கு எப்பொழுதும் போல் எட்டாக்கனியாகவே இருக்குமா என்று பெற்றோர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.