டெல்லி:  சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ்2  மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்.15ல் தொடங்கி ஏப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது.   10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15ல் தொடங்கி மார்ச்.13 வரை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதனப்டி, 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்வுகள் தொடங்கி, மார்ச் 3வது வாரத்தில் முடிவடைகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்.15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதுபோல,  12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ந்தேதி தொடங்கி  மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது