Skip to content
  • Tue. Sep 22nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா தமிழ் நாடு

மாணாக்கர்கள் மகிழ்ச்சி: சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

Jun 25, 2020

டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதன் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவ தாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ  12-ம் வகுப்பு, மற்றும்  மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளதால், தேர்வுகளை நடத்த பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையில்,  இந்த சூழலில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்றும், மாநில தேர்வுகளை போல சிபிஎஸ்இ தேர்வுகளையும்  ரத்து செய்ய வேண்டும் என ஒரு மாணவரின் பெற்றோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை  3 நீதிபதிகள் கொண்ட  அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின் போது,  மீதமுள்ள தாள்களுக்கான தேர்வுகளை  ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய கல்வி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்..
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை என்று அறிவுறுத்தி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அனைத்து சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Post navigation

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை காட்டும் புதிய செயற்கைக் கோள் படங்கள்
தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு… தமிழக காங்கிரஸ் மறுப்பு

Related Post

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer